களரி அறக்கட்டளைக்கு சாசுவத நிதி கோரும் விண்ணப்பம்

தேதி : 28-03-2025      

அனுப்புதல்
மு. ஹரிகிருஷ்ணன்
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
(Kalari Heritage and Charitable Trust)
11/25 ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல் மேட்டூர் வட்டம் 
சேலம் - 636453         

அன்புடையீர் வணக்கம், (பொருள் - களரி அறக்கட்டளைக்கு  சாசுவத நிதி   வேண்டி) 

தமிழர் தொல்கலைகளை (கூத்து, தோற்பாவை நிழற்கூத்து, பொம்மலாட்டம்)  மீட்டெடுப்பது, மேம்படுத்துவது, ஆவணப்படுத்துவது, அவற்றின் ஆதாரபடிவம் மாறாது, ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு கையளிப்பது, கலைஞர் சமூக இளைஞர்கள்  கல்வி, மூத்த கலைஞர்களின் மருத்துவம்  போன்ற  களப்பணிகளிலும், சமூகப்பணிகளிலும்   கடந்த இருபது  வருடங்களாக  களரி அறக்கட்டளை முனைப்புடன்  செயல்பட்டுவருகிறது. மேற்சொன்ன களப்பணிகளைத்   திட்டமிட, மேற்கொள்ள, தொடர்ந்து  செயலாற்ற,  களரி அறக்கட்டளை  நிலைபெற்று இயங்க அதற்கான  சாசுவத நிதி .இன்றியமையாத தேவையாகும். ஆகவே அன்பர்கள், கலையிலக்கிய  உணர்வாளர்கள் வருடம் ஓர்முறை  மனமுவந்து தங்களால் வழங்க சாத்தியமுள்ள கொடையை அவர்களாகவே முடிவு செய்த ஓர் தேதியில்  வழங்க ஒப்புதல் அளிப்பதோடு அவ்வண்ணமே  அந்த அருங்கொடையை வழங்கவேண்டுமாய்  பணிவன்புடன்  கேட்டுக்கொள்கிறேன். 

இவண்
மு. ஹரிகிருஷ்ணன்
91 98946 05371

குறிப்பு: 
களரி அறக்கட்டளை இது நாள் வரை மேற்கொண்டுள்ள பணிகளின்  விவரம் இணைப்பில்.

Kalari_in_the_field_Tamil_pdf

களரி அறக்கட்டளைக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு.
Kalari Heritage and Charitable Trust
SB a/c no. - 31467515260
State Bank of India, Mecheri branch, Salem
IFSC - SBIN0012786
MICR - 636002023
SWIFT - SBININBB300

linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram